சனிக்கிழமை, மே 18
Shadow

திரைப்படங்கள்

பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு! மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகின்றன. அதன்படி மாநகரம் படத்தை இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படமான மாஸ்டரும் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதில் விஜய் கதாபா...
‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்!

‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்! நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ், இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரட்டையர்களான இவர்கள் இருவரும், ஏற்கனவே கேஜிஎப், கைதி, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா!

25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் - மீனா! மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க ப...
கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி!

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி! ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’, ‘சயனைடு மோகன்’ உள்ளிட்ட பல படங்களை பிரியாமணி கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை அடுத்து விவேக் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை பிரியாமணி, இந்த படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மேலும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால், அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.  ...
வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்!

வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை படத்தில் இருந்து வெளியேறிய நடிகர்கள்! எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ’வலிமை’ படத்தின் எந்த அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடவில்லை. ஆனால், இப்படம் குறித்து ஏதாவது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு ’வலிமை’ படத்திற்காக ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கினோம்., அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்த போது அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறிவிட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  ...
பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ராஷி கண்ணா!

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ராஷி கண்ணா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ராஷி கண்ணா! தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், ஜீவாவுக்கு ஜோடியாக மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷி கண்ணா. இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தில் நடிகை ராஷி கண்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன...
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்!

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்! பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. சமீபத்தில் ப...
நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்!

நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்! தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளை யானை’. நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது படக்குழு. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்னணி தொலைக்கா...
இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த படம் ‘மாஸ்டர்’. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான இப்படம், மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இந்த ஆண்டில் திரையரங்கில் வெளியாகி அதிக வசூல் குவித்த படமும் மாஸ்டர் தான். மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்யின் ஜேடி (வாத்தி) கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தக...
அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்!

அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்! இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இந்திப் படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் அட்லீ, தனது மனைவி பிரியாவுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்கள் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீயுடன் ராஜா ராணி படத்தில...