புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Shivakarthikeyan

மங்காத்தா கூட்டணியில் சிவகார்த்திகேயன்!

மங்காத்தா கூட்டணியில் சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'டான்', 'அயலான்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்துப்போகவே ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் 'மன்மத லீலை' என்ற திரைப்...
சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'டான்' மற்றும் 'அயலான்' படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 'எஸ்.கே 20' படத்தின் படப்பிடிப்பு இன்று(10.2.2022) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில்...
தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. https://youtu.be/-aVdxDDrcTc...
ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்!

ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டிருந்த சமயத்தில் மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவித்து ரசிகர்களை சந்தசோஷப்படுத்தியது படக்குழு. இந்நிலையில், டான் படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் ஆதித்யா குரலில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ரசிகர்க...
‘நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்’ – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

‘நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்’ – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தொலைக்காட்சித் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி பிறகு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் 2012-இல் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் எதிர்நீச்சல், மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, டான் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அவர் சினிமாவில் நுழைந்து இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர் மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனை குறித்து விரிவான விளக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம். இந்...
டான் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்!

டான் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர். இந்நிலையில், டான் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்திகேயன் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதன் படி டான் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது....
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்! மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இவர் தற்போது டான், அயலான், சிங்கப்பாதை, எஸ்கே20 போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணிக்கும் கமல்ஹாசன் அவருடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் பல படங்களை தயாரித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இது ...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜலபுலஜங்கு பாடல்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜலபுலஜங்கு பாடல்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜலபுலஜங்கு பாடல்!! சி.பி. சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் ‘டான்’. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோரும் நடித்துள்ளனர்.  கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி ஒரு மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரோகேஷ் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....
6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்!

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்! கொரோனாவால் முடங்கிய பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகள் வேகவேகமாக முடிந்து தற்போது அடுத்தடுத்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் `டான்' ஆகிய 2 படங்களையும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே 2016-ல் விஜய்சேதுபதியின் றெக்க, சிவகார்த்திகேயனின் `ரெமோ' ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் மோதின. 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இருவர் படங்களும் மோத வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த `டாக்டர்' படம் எந்த பெரிய படங்களும் போட்டிக்கு வராத நிலையில் தனித்து வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.100 கோடி வரை வசூல் பார்த்ததாக கூறப்பட்டது. விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ்...
‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு!

‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு! நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், வினய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, அர்ச்சனா, தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இதில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியதோடு மாபெரும் வரவேற்பையும் பெற்றது. அண்மையில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டாக்டர் பட...