ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: simbu

மீண்டும் தள்ளிப் போன மஹா.. வைரலாகும் போஸ்டர்!

மீண்டும் தள்ளிப் போன மஹா.. வைரலாகும் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மஹா. இதில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதன்படி, ஜூலை 22-ஆம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'வாலு' திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மஹா'. இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது படம் ...
பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் யார்!

பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் யார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக முடிவடைந்துள்ளது. 24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை துவக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின் சில காரணங்களால் அவர் விலகவே அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த வார துவக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோரே இருந்த நிலையில் சமீபத்தில் அபிராமி மற்றும் அவரைத் தொடர்ந்து ஜூலி ஆகியோர் எலிமினேட் ஆனார்கள். இதைத்தொடர்ந்து நிரூப், தாமரை, பாலா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் மட்டுமே பைனலுக்கு சென்றனர். இறுதியில் அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை பாலா வென்றுள்ளார். மேலு...
சிம்பு வழக்கில் தாமதம்.. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்!

சிம்பு வழக்கில் தாமதம்.. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார். அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இணையதளங்கள...
வேட்டை மன்னன் படத்தை தூசி தட்டும் சிம்பு!

வேட்டை மன்னன் படத்தை தூசி தட்டும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ’டாக்டர்’ படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போது ரஜினியின் 169-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகியுள்ளார். நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது. அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய சிம்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே நிரம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நேரடியாக ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகிறது, இதனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதியன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிக்பாஸ் ரசிகர்கள், அடுத்து இதனை தொகுத்து வழங்கப்போவது யார் என முணுமுணுத்து வந்தனர். இந்நிலையில் இதனை தொகுத்து வழங்க நடிகர...
பிக்பாஸில் கமலுக்கு பதில் இவரா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸில் கமலுக்கு பதில் இவரா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே நிரம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நேரடியாக ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகிறது, இதனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதியன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என அவர் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. விக்ரம்...
விஜய், சிம்பு கொடுத்த  25 லட்சம்! பேரம் பேசும் பெப்சி டீம்!!

விஜய், சிம்பு கொடுத்த 25 லட்சம்! பேரம் பேசும் பெப்சி டீம்!!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    விஜய், சிம்பு கொடுத்த 25 லட்சம்! பேரம் பேசும் பெப்சி டீம்!!   https://youtu.be/lVlS4PGKwRk  
சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்க கோரிய நடிகர் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில்,...
ரசிகர்களுக்கு முன் உதாரணமாக மாறிய சிம்பு!

ரசிகர்களுக்கு முன் உதாரணமாக மாறிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி பிறகு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. 1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ’உறவு காத்த கிளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் தொடர்சியாக குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து காதல் அழிவதில்லை, தம், அலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார். நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களில் கைதேர்ந்தவர் சிம்பு. இருப்பினும் சிம்புவின் மீது பல விமரசனங்கள் வைக்கப்பட்டு வந்தது. படங்களில் சற்று கவனம் செலுத்த தவறிய சிம்பு திடீரென அவரின் உடல் எடை அதிகரித்தது. 2019-இல் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான போது சுமார் 105 கிலோ எடையுடன் பருமனான கதாநாயகனாக திரையில் தோன்றினார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உடல் எடைக்காக நடிகர் சிம்பு...
மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா!

மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு படத்திற்கு கிடைத்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இதில் நடித்த எஸ்.ஜே.சூர்யா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையபோவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டிரைவிங் லைசென்ஸ். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் மீண்டும் சிம்பு-எஸ்...