திங்கட்கிழமை, மே 13
Shadow

politics

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கி கடன்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கி கடன்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

HOME SLIDER, politics, செய்திகள்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என தமிழக சட்டபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது:- நடப்பாண்டில் ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1. 2015-16ஆம் ஆண்டில், பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2 வருடங்களில், 8,875 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 2017-18ஆம் ஆண்டில், 800 கோடி ரூ...