செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: கொரோனா தொற்று

மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் கூடுதலாகி வருகிறது. மக்கள்தொகை நெரிசலாகவும், அதிகமாகவும் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், மக்களை காக்கிற பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டும் வருகிறோம். முழு ஊரடங்கு பிறப்பி...
பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை!

பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறையாததால் 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. கொரோனா முதல் அலை இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது. இதனால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவித்தது. விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில தினங்களில் கொரோனா 2-வது அலை தாக்க தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி பேர் ஆகும். பிளஸ்-2 வகுப்பில் மட்டும் சுமார...
புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி!

புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி! பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் அலை பரவ தொடங்கியது. 2-ம் அலையில் முதியோர் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் இளைஞர்களும் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகினர் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பரவி அதிகபட்சமாக நாளுக்கு 30 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா  பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 367 பேரை பரிசோதித்ததில் 103 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. தொற்று சதவீதம் 1.62 சதவீதமாக குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர் கடந்த ஜூன் 6-ந் தேதி வரை மாநிலத்தில் 4 ஆயிரத்து 719 குழந்தைகள் தொற்றால...
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்தது. ஒருகட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் தொற்று சற்று குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. எனவே தொற்றின் சங்கிலித்தொடரை அறுப்பதற்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது மே 31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதிவரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த 2 முழு ஊரடங்கில் நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து 3-ம் முறையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கொர...
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன்  ஊரடங்கு  குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு  அமல...
கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
கொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா!

கொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா தொற்று அறிகுறி... தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா! நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும்,...