புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: தமிழக அரசு

3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு!

3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு! தமிழகத்தில் கொரோன தொற்றின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தொற்று நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். மேலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்கள...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி!

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி! வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணிபுரிந்த பின்பே மருத்துவ பணி தொடர வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை காரணமாக இந்த 2 விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்! சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசிவிர் மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு ச...
தமிழக அரசு அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்!

தமிழக அரசு அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக அரசு அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்! ஆவின்பால் விலை குறைப்பு அறிவிப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் நீல நிறம் லிட்டருக்கு ரூ.40, அரை லிட்டர் ரூ.20-க்கும், ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூ.22-க்கும், ஆவின் ஆரஞ்சு அரை லிட்டர் ரூ.24-க்கும், ஆவின் இளஞ்சிவப்பு நிறம் அரை லிட்டர் ரூ.18.50-க்கும், நாளை முதல் விற்பனை செய்யப்படும். டீமேட் எனப்படும் பால் லிட்டருக்கு ரூ.57-க்கு விற்கப்படும். பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்டைதாரர்களுக்கு ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.37-க்கும், அரை லிட்டர் ரூ.18.50-க்கும் கிடைக்கும். பச்சை நிறமுள்ள அரை லிட்டர் பால் ரூ.21-க்கும், ஆரஞ்சு நிறம் ரூ.23-க்கும், இளஞ்சிவப்பு நிறம் ரூ.18-க்கும் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் ஏற்க...
முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?!

முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- • கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கின் போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான  தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். • வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  (https://eregister.tnega.org). இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும். • ...
மெரினாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை!

மெரினாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை!

HOME SLIDER, NEWS
கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மெரினா கடற்கரைக்கு செல்ல வார இறுதி நாட்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், மெரினாவுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரைக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மெரினா வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் 2-வது வாரமாக நேற்றும், இன்றும் மெரினாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரை காலையிலேயே களை கட்டிவிடும். நடைபயிற்சி செல்பவர்கள் அதிக அளவில் காணப்படுவார்கள். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்தோடு பலரும் மெரினாவுக்கு வந்து பொழுதை போக்குவார்கள். ஆனால் இன்று மெரினா கடற்கரை கொரோனா தடை காரணமாக ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப...
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன!

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன! தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், மற்ற மாநிலங்களில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் ஆகியவை காரணமாக தமிழகத்திலும் கொரோனா நோய் தொற்று இப்போது மிக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதையும் தாண்டி கொரோனா மிக வேகமாக பரவி விட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து இருந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக பிரசாரத்தில் கூடியதால் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. கொரோனா பரிசோதனை தற்போது அ...
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்!

கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்! தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள் மாஸ்க் அணிவதை ஒழுங்குபடுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகள் நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த வாரம் முதல் சராசரி நோய்த்தொற்று 3900 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.41 சதவீதம் என குறைவாகவே உள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 34.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் இதுவரை விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.88 கோடி அபராதம் வசூலிக்க...
ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெ., நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெ., நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  ரூ.57.8 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். . அதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர...
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை... ஆனால் சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவில்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வழக்க...