சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: பிரதமர் மோடி

டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது! இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில்...
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு!

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு! அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட வி...
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்… பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி!

பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்… பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்... பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய மோடி! அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர் பேசினார். குறிப்பாக சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கினார். “ஆப்கானிஸ்தான் பிரதேசம் பயங்கரவாதத்தை பரப்புவதற்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும். ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் காக்க வேண்டும். உலகத்திற்கான  பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. எந்தவொ...
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு! அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த ஐ.நா. பொது சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகளும் உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசிகளை தயார...
பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் – நேரில் சந்தித்த மோடி புகழாரம்!

பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் – நேரில் சந்தித்த மோடி புகழாரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் - நேரில் சந்தித்த மோடி புகழாரம்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் 19 பதக்கங்களை குவித்தனர். நாடு திரும்பிய 54 பேர் கொண்ட இந்திய அணி, பிரதமர் மோடி அழைப்பின்பேரில், கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு சென்றது. மோடியுடன் இந்திய அணி வீரர்கள் உரையாடினர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ, நேற்று பிரதமர் மோடியின்  அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டது. பாரா ஒலிம்பிக் வீரர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:- உங்களின் விளையாட்டு செயல்பாடு பாராட்டத்தக்கது. பல்வேறு சிரமங்களை கடந்து சாதித்து இருக்கிறீர்கள். உங்கள் மனஉறுதியையும் பாராட்டுகிறேன். உங்கள் அனைவராலும் நான் ஊக்கம் பெற்றேன். உங்களது சாதனை, ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வளரும் விளையாட்டு ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை! முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி  உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர்....
போலீசார் மீதான தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் – பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை!

போலீசார் மீதான தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் – பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
போலீசார் மீதான தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் - பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை! ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ். பயிற்சி பெற்று வரும் 71 மற்றும் 72-வது பிரிவு இளம் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளம் அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அந்தவகையில் அவர் பேசும்போது கூறியதாவது:- ஒரு சிறந்த போலீஸ் துறை மற்றும் அதற்கான பயிற்சி கட்டமைப்புகளை கட்டியெழுப்ப கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா முயற்சித்து வருகிறது. இந்த பணிகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 1930 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் இளம் தலைமுறையினர் முன்னோக்கி வந்தனர். ஒட்டுமொத்த இளம் தலைமுறையினரும் ஒரே குறிக்கோளுக்காக ஒன்றிணைந்தனர். அதே உணர்வை தற்ப...
நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நூற்றாண்டு விழா- பாலகங்காதர திலகருக்கு பிரதமர் மோடி புகழாரம்! சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி  அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நாட்டிற்கு செய்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி  தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பாலகங்காதர திலகரின் கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் குறித்த கருத்துக்கள் தொடர்ந்து பலரை ஊக்குவித்து வந்தது. அவர் நடத்திய நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி அவரை நான் வணங்குகிறேன். தற்போதைய சூழ்நிலைகளில் அவருடைய எண்ணங்களும், கொள்கைகளும் மிகவும் பொருத்தமானவை. பொருளாதார ரீதியாக வளமான இந்தியா மற்றும் சமூக ரீதியாக முற்போக்கான பாரதத்தை உருவாக்க அவர் முயன்றார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்....
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்! பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை  பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி  தலைமையில் இன்...
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்! தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில்   மு.க.ஸ்டாலின்  பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  சந்தித்து பேசுகிறார். இந்த சந்தி...