டெல்லி சென்றடைந்த தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த புதிய அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், இரு மாநில அரசுகளும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன.
இந்த சூழலில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இந்த குழு தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டது.
அவர்களைத்தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்றார். அவர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக டெல்லி செல்கிறார். அவர், ந...

