உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் – அமெரிக்க அதிபர் தகவல்!
ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும் போது, ‘உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் முடிவு செய்துவிட்டார் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜோபைடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ரஷிய படைகள் உக்ரைனை வரும் நாட்களில் தாக்க திட்டமிட்டுள்ளன என்று நம்புவதற்கு எங்களுக்கு காரணங்கள் உள்ளது. உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் புதின் முடிவு செய்துவிட்டார்.
அமெரிக்க உளவுத்துறையின் கணிப்புபடி இந்த தாக்குதலில் கீவ் நகரம் குறி வைக்கப்படும். ரஷிய படை வீரர்கள் சுமார் 1...

