செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: curfew

முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?!

முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- • கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கின் போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான  தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். • வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  (https://eregister.tnega.org). இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும். • ...
தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு!

தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கடைகள் மூடப்பட்டன- பஸ், வாகனங்கள் ஓடினாலும் இயல்புநிலை பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தனியாக செயல்படும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இன்று காலையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே 6 மணியில் இருந்து செயல்பட்டன. இந்த கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டு...
10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்!

10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்! நாடுமுழுவதும் 10 சதவீதத்துக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக சுமார் 150 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால் 2-வது அலை பரவலை தடுத்து நிறுத்தி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. 150 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்று கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியானது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால் முன்பு போல பச்சை, சிவப்பு, மஞ்சள் என 3 மண்டலங்களாக மாவட்டங்களை பிரித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் மாநிலங்களுக்கு நேற்று இர...
தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு - எந்தெந்த பணிகளுக்கு அனுமதி? தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று அமலில் இருக்கும் முழு ஊரடங்கில் அரசு விலக்கு அளித்துள்ள பணிகள் விவரம் வருமாறு: பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் வழக்கம்போல் நடைபெறலாம். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் வழக்கம்போல் பணியாற்றலாம். மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருத்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் நடைபெறலாம். அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப்பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், பெட்ரோல்-டீசல், எல்.பி.ஜி. கியாஸ் போன்ற எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம். ஓட்டல்...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு! தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. முககவசம் அணிவதை தீவிரப்படுத்த அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. என்றாலும், கொரோனா பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வா...
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு!

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு! தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் நாளை (10-ந்தேதி) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று பயணம் செய்வதற்கு கண்டக்டர்கள் அனுமதிக்கமாட்டார்கள். தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பஸ்கள் இருந்த போதிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக 15 ஆயிரம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூட்டம் குறைவாக இருப்பதால் பஸ்களும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் 4 ஆயிரம் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசின் புதிய உத்தரவால் பய...