புதன்கிழமை, மே 15
Shadow

Tag: curfew

குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா வைரஸ்  அடிக்கடி உருமாற்றம் பெற்று புதிய வகையாக மாறி பரவி வருகிறது. இதுவரை காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று பல்வேறு வடிவங்களை கொரோனா வைரஸ் எடுத்து விட்டது. ஒமைக்ரான் வைரசில் இருந்து 4 வகையான துணை உருமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் பிஏ1, பிஏ.2 ஆகிய 2 வகை வைரசுகள் தற்போது உலகம் முழுக்க பரவி உள்ளன. இந்த நிலையில் பிஏ.1, பிஏ.2 ஆகிய 2 வைரசுகளும் கலந்து எக்ஸ்-இ என்ற புதிய வகை கொரோனா வைரசை தோற்றுவித்துள்ளன. இந்த எக்ஸ்-இ வைரஸ் முந்தைய கொரோனா வைரசுகளை விட 10 மடங்கு அதிவேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. இது ஒருவரை தாக்கினால் உடலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. என்றாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று பெரும்பலான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுக்க சுமார் 600 பேருக்கு எக்ஸ்-இ கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்ப...
பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியதால் கடந்த ஆண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்கள் என்ற சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜனவரி 31-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. வகுப்புகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக...
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்! ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான முன் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி ...
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

helth tips, NEWS, செய்திகள்
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு - பஸ்கள் வழக்கம்போல் இயங்கின! கோவை மாவட்டத்தில் மெல்ல, மெல்ல குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடக்கூடிய வீதிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கோவை கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி...
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று கட்டுப்படுவதை பொறுத்து அவ்வப்போது அரசு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய் தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 2-வது வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்பட 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 3-வது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இதில் 3-வது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களுக்கும் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன...
சென்னையில் படிப்படியாக உயர்வு- மாநகர பஸ்களில் 11 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் படிப்படியாக உயர்வு- மாநகர பஸ்களில் 11 லட்சம் பேர் பயணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் படிப்படியாக உயர்வு- மாநகர பஸ்களில் 11 லட்சம் பேர் பயணம்! சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் 3,200 பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 35 லட்சம் பேர் பயணம் செய்தனர். கொரோனா பாதிப்புக்கு பின்னர் பஸ் போக்குவரத்து குறைந்தது. பொதுமக்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்கள். கடந்த வாரம் முதல் சென்னையில் மாநகர பஸ் சேவை தொடங்கியது. 6 லட்சம் பேர் பயணம் செய்தனர். 1,500, 2000 என்ற அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முதல் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டதால் பஸ் சேவையும் அதிகரிக்கப்பட்டன. நேற்று 2,210 பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் 11 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை. பயணிகள் குறைந்த அளவில் பயணம் செய்கிறார்கள். 2-வது அலைக்கு முன்னதாக வரை 20 லட்ச...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? - முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ம...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28-ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது....
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்தது. ஒருகட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் தொற்று சற்று குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. எனவே தொற்றின் சங்கிலித்தொடரை அறுப்பதற்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது மே 31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதிவரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த 2 முழு ஊரடங்கில் நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து 3-ம் முறையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் க...
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்....