இந்திய அரசியலில் மோடி பலசாலி – ரஜினிகாந்த் சூசக பதில்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று விமான நிலையத்தில பேட்டியளித்தார். 7 பேர் விடுதலை தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, எந்த 7 பேர்? என்று ரஜினி எதிர் கேள்வி கேட்டார். ரஜினியின் இந்த கேள்வி விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று தனது வீட்டில் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது கேள்வி தெளிவாக கேட்கப்படவில்லை என்று கூறினார்.
அப்போது பாஜனதாவிற்கு எதிராக மெகா கூட்டணி உருவாகி வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘‘ஒருவரை 10 பேர் எதிர்த்தால் யார் பலசாலி?’’ என்று நிருபர்களை பார்த்து கேள்வி கேட்டார். இதன்மூலம் இந்திய அரசியலில் மோடி பலசாலி என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்...

