திங்கட்கிழமை, மே 20
Shadow

CINI NEWS

பாலியல், போதைபொருள் கடத்தல்… அதிர்ச்சியில் திரையுலகம்..!  விசாரணை வளையத்தில் பிரபலங்கள்

பாலியல், போதைபொருள் கடத்தல்… அதிர்ச்சியில் திரையுலகம்..! விசாரணை வளையத்தில் பிரபலங்கள்

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னணி நடிகர் - நடிகைகளுக்கு நோட்டீஸ் திரையுலகினருக்கு இப்போது ஏழரை நடக்கிறது போலும்... மலையாள திரையுலகில் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் போதை பொருள் கும்பலோடு தொடர்பு என்று தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கு பட உலகில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கில் போதை கடத்தல் கும்பலோடு தொடர்பில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் நடிகைகள் பலர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்ப...
பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார் .இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறியபின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான். அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒ...
உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்யும்   ‘ஒரு குப்பை கதை’

உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்யும் ‘ஒரு குப்பை கதை’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில்  நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும்  'ஒரு குப்பை கதை'! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில  நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர்.  தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர். ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் முறையாக இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். நல்ல கதைக்கு 'ஒரு குப்பை கதை' எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் இருவரும். ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என  முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது கொடுத்துக் கேட்டவுடன்...
அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’

அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையாம். இந்த படத்தில் நாயகனாக வாராகி-யே நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர். பின்னர் இப் படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை நி...
சரத்குமாரின் 2வது ஆட்டம்..!

சரத்குமாரின் 2வது ஆட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘2வது ஆட்டம்’. சரத்குமாரின் வித்தியாசமான நடிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இதன் முதல் போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது.
அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் நடைபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழ் திரைப்படம்..!

அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் நடைபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழ் திரைப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருகஅகும் காட்டுப்பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி மக்கள் வாழும் மசாய் மாரா கிராமத்தில் நடைபெற்ற முதல் தென்னிந்திய தமிழ் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. கென்யாவின் மாசாய் மாரா கிராம பழங்குடிகள் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் மிக பழமையான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை இன்றும் பாதுகாத்து வாழ்ந்து வருகிறார்கள். கால்நடைகளோடு தமிழர்களுக்கு எப்படி ஒரு நெருக்கமான உறவு இருக்கிறதோ அதேபோன்று அந்த பழங்குடி மக்களுக்கும் கால்நடைகளோடு நல்ல உறவோடு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் கால்நடைகளின் பங்கு மிக அதிகம் காணப்படுகிறது. தமிழகத்தில் மெரீனாவில் இளைஞர்களால் நடைபெற்ற அறப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் தமிழர்களின் அடையாளமான காளைகளைப்போல மசாய் பழங்குடிகள் வைத்திருக்கிற காளைகளுக்கும் ஒரு தனித்துவமான...
கட்டம் படம்  ஒரு ‘கர்மிக் திரில்லர்’

கட்டம் படம் ஒரு ‘கர்மிக் திரில்லர்’

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
நெடுஞ்சாலை' , ' 'அதே கண்கள் ' போன்ற படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ஜொலித்த நாயகி ஷிவதா நாயர். அருமையான, வித்யாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நுணுக்கத்தை நன்கு அறிந்திருக்கும் இவரது அடுத்த படம் ''கட்டம்''. முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கியுள்ள படம் 'கட்டம்'. இப்படத்தை 'icreatewonderfilms' சார்பில் சந்தியா ஜனா தயாரித்துள்ளார். புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் , ஷிவதாவோடு சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஷிவதா பேசுகையில்,'' கட்டம் ஒரு 'கர்மிக் திரில்லர்'.இது ரசிகர்களுக்கு முற்றிலும் புது வகையான சினிமா.சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவன் செய்யும் மாபெரும் தவறுக்காக, எதிர்பாராத நேரத்தில், முற்றிலும் எதிர்பாராத வகையில் அவன் விதியெனும் 'கர்மா' வால் பழிவாங்கப்படுவதே 'கர்மிக் திரில்லர்'. இதுவே 'கட்டம்' படத்தின் ச...
தமிழக அரசின்  10 விருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே. பட நிறுவனம்..!

தமிழக அரசின் 10 விருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே. பட நிறுவனம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது. "என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும்,நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம்.  நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது என்கிறது என்று தான் சொல்லுவேன். நான் சார்ந்து இருக்கும் திரை உலகிகின் சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்பிமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இதை போலவே இன்று விருதுகள் கிடைக்க பெற்ற ஏனைய திரை உலகினருக்கும் என் வாழ்த்துக்கள். சவ...
தமிழ்த் திரைப்படங்களுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு..!

தமிழ்த் திரைப்படங்களுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2009 - 2014 வரை வெளிவந்த படங்களில் சிறந்த படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் குறித்த முழு விபரங்கள் பின்வருமாறு:- 2004-ம் ஆண்டு: 1 சிறந்த படம் முதல் பரிசு - பசங்க 2 சிறந்த படம் இரண்டாம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார் 3 சிறந்த படம் மூன்றாம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு 4 சிறந்த நடிகர் - கரண் (மலையன்) 5 சிறந்த நடிகை - பத்மப்ரியா (பொக்கிஷம்) 6 சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு) 7 சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அஞ்சலி (அங்காடித் தெரு) 8 சிறந்த வில்லன் நட...
விவசாய சங்கத்தின் பாராட்டைப் பெற்ற ‘பப்ளிக் ஸ்டார்’ 

விவசாய சங்கத்தின் பாராட்டைப் பெற்ற ‘பப்ளிக் ஸ்டார்’ 

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படக்குழுவினர், விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தனர். இதை மக்கள் பலரும் வரவேற்றனர்.   இது குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு ‘தப்பாட்டம்’ படக்குழுவினரைப் பாராட்டி, அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,  திருச்சியில் ரயில் நிலையத்தில் பல்வேறு விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயக் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா 25000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பணத்தை...