வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: ஜி.வி.பிரகாஷ்

‘மார்கழி திங்கள்’படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா!

‘மார்கழி திங்கள்’படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 'மார்கழி திங்கள்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது...
செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘செல்ஃபி’ படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்....
நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்! நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து அவர் மார்க் ஆண்டனி என பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் 33வது படமான இதை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. விஷாலுடன் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களின் இசை வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கப்போகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இ...
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!

ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அன்றைய தினத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் 3.33 (மூணு முப்பத்தி மூணு) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாம்பூ ட்ரீஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார்....
‘மாறன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

‘மாறன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மாறன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்! நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி மாறன் படத்தின் பாடல் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், இப்படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட 4 பாடல்கள் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். விரைவில் மாறன் படத்தின் பாடல்கள் வ...
ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி!

ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி! தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்‌ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது, திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமிக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷின் பதிவுக்கு பதிலளித்து டுவிட் செ...
ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘செல்ஃபி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன் கலந்து திர...
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது. இந்ந...
நெப்போலியனுடன் ஜிவி பிரகாஷ் இணையும் புதுப்படம்!

நெப்போலியனுடன் ஜிவி பிரகாஷ் இணையும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து வழங்கும் டிராப் சிட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், ஜிவி பிரகாஷ், ப்ராண்டன் டி ஜாக்ஸன் நடிக்கின்றனர். தனது டெவில்’ஸ் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன் தனது பொழுதுபோக்கு திரைப்படமான ‘ட்ராப் சிட்டி’க்கு தயாராகியுள்ளார். இதில் முன்னணி தமிழ் நடிகர் நெப்போலியன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். டெல். கே. கணேசன் மற்றும் ஜி.பி. திமோதியோஸ் ஆகியோர் தொடங்கிய கைபா பிலிம்ஸ், மிச்சிகனில் இருந்து ஒரு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. டெல் கணேசனின் முந்தைய படமான டெவில்’ஸ் நைட் டிஜிட்டலில் வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. ட்ராப் சிட்டி படத்தை உலகம் முழுவதும் உள்...
தனுஷ் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் ஜெயில்!

தனுஷ் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் ஜெயில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்" ஜெயில் " சிங்கள் டிராக் நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்! அங்காடி தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன்.இவரது புதிய கண்ணோட்டத்தில் ஜி .வி பிரகாஷ் குமார்,அபர்நதி ,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில். தனுசுடன் அதீதி ராவ் பாடிய லவ் மெலோடி அங்காடி தெரு, வெயில்,படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுக படுத்தியவர் வசந்த பாலன்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை,நடிப்பில் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு  ஏற்பட்டுள்ளது.இந்த படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது.படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ்,அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள்.கபிலன் இப்பாடலை எழு...