அமலாபாலின் அதோ அந்த பறவை போல
அமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் படம்,
அதோ அந்த பறவை போல!
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அதோ அந்த பறவை போல. அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதைநாயகியாக நடித்துள்ளார்.
கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது, ‘அதோ அந்த பறவை போல’.
அமலாபால் கதைநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்...
