புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அபர்ணா பாலமுரளி

சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், சூர்யாவை தொடர்ந்து, கார்த்திக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் விக்ரம், சூர்யா பட நடிகைகள்!

அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் விக்ரம், சூர்யா பட நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் விக்ரம், சூர்யா பட நடிகைகள்! சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களில் ரீத்து வர்மா விக்ரமுக்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செ...