புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி துணை முதல் மந்திரி மீது சிபிஐ வழக்குப்பதிவு  !

டெல்லி துணை முதல் மந்திரி மீது சிபிஐ வழக்குப்பதிவு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதிய மதுக்கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. துணை முதல் மந்திரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு முதல் மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்....
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சார கட்டணத்தில் மானியம்: கெஜ்ரிவால்!

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் மின்சார கட்டணத்தில் மானியம்: கெஜ்ரிவால்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தலைநகர் டெல்லியில் புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் அரசாங்கத்தின் நிதி உதவியை பெறும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், டெல்லியை தொழில் முனைவோருக்கான தலைநகரமாக மாற்றுவதே ஆம் ஆத்மி அரசின் லட்சியம் என குறிப்பிட்டார். மேலும் டெல்லியில் தற்போது குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெறுகின்ற வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போது மின் நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தினால் ரூ.800 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்சார கட்டணத்திற்கான மானியத்தை தொடர விரும்புகிறீர்களா என்று க...
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. பக்கத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகள், பயிர் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை போக்க புகை கோபுரங்கள் அமைக்குமாறு டெல்லி அரசுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, புகை கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தலா ஒரு புகை கோபுரத்தை அமைத்துள்ளன. கன்னாட்பிளேஸில், நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட புகை கோபுரத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். பின்னர் அவர...