அரை நிர்வாண ஓவிய சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு முன் ஜாமீன் மறுப்பு!
அரை நிர்வாண ஓவிய சர்ச்சையில் சிக்கிய பெண்ணுக்கு முன் ஜாமீன் இல்லை!
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த பனம்பிள்ளியை சேர்ந்தவர் ரெகானா பாத்திமா (வயது 34). பி.எஸ்.என்.எல். முன்னாள் ஊழியரான இவர் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்தில் பங்கேற்றது உள்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் இருமுடி கட்டி நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த மாதம் ரெகானா பாத்திமா தன் மகன் மற்றும் மகளை, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்தார். அதை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து கொண்டு ‘உடல் மற்றும் அரசியல்‘ என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ மற்றும் கருத்துகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பெரும்பாலானோர் கட...
