கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிதி - முதல்வர் அறிவிப்பு
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
நேற்று தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அவற்றுக்கு இணங்க, நேற்று மாலை விரிவான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ், சென்னையில் காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாணைகள் அனைத்தும் இன்று ம...
