தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் – இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு
தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் - இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு
இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ராயல்டி பிரச்சினைகளுக்கு பின் எஸ்.பி.பி. மீண்டும் இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்ப்ட்டது.
இத்தனை ஆயிரங்களில் டிக்கெட் விலை விற்கப்பட்டாலும் ரசிகர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட நிகழ்ச்சி நடத்தியவர்கள் செய்யவில்லை.
சரியான குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதிகள் இல்லை. பாதுகாப்பு சுத்தமாக இல்லை.
அதிலும் ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர் 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்கான இருக்கைகளை பிடித்து கொண்டதால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு சீட் கிடைக்காமல் நின்றனர்.
இத்தனை சிரமங்களை தாண்டி இளையராஜாவின் இசையில் ம...

