நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?
நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் நாளை (28-ந் தேதி) நடக்கிறது.
இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் ஒரு நாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட், 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டு...
