இந்திய துப்பாக்கி சுடுதல் அணி குரோஷியா பயணம்!
இந்திய துப்பாக்கி சுடுதல் அணி குரோஷியா பயணம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அதன் தலைநகர் சாகிரெப்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் முதலில் கலந்து கொள்ளும் இந்திய அணியினர் அடுத்து ஆசிஜெக் நகரில் நடைபெறும் ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் போட்டி (வருகிற 20-ந் தேதி முதல் ஜூன் 6-ந் தேதி வரை) மற்றும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ஜூன் 22 முதல் ஜூலை 3-ந் தேதி வரை) ஆகியவற்றில் பங்கேற்கிறார்கள். ஜூலை 23-ந் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இறுதிகட்டமாக தயாராகும் பொருட்டு குரோஷியாவில் 2½ ...
