ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: உத்தவ் தாக்ரே

சோனியா நடத்தும் கூட்டத்தில் சிவசேனா கலந்து கொள்கிறது!

சோனியா நடத்தும் கூட்டத்தில் சிவசேனா கலந்து கொள்கிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சோனியா நடத்தும் கூட்டத்தில் சிவசேனா கலந்து கொள்கிறது! கொரானா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். சோனியா காந்தி தலைமை வகிக்கும் இந்த கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறுகிறது. இந்நிலையில், சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்பார் என சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஆனால், சோனியா தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என அக்க...
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது – முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திட்டவட்டம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது – முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திட்டவட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது சிவசேனாவின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். குடியுரிமை திருத்தச்சட்டத்தால், இந்திய குடிமக்களை நாட்டில் இருந்...