அரசியல் வெற்றிக்கு முதலில் எழுச்சி வேண்டும்… அடுத்தது அலை கடைசியில் சுனாமி ஏற்பட வேண்டுமாம் – சொல்வது ரஜினி !
அரசியல் வெற்றிக்கு முதலில் எழுச்சி வேண்டும்... அடுத்தது அலை கடைசியில் சுனாமி ஏற்பட வேண்டுமாம் - சொல்வது ரஜினி !
ஒரு தனியார் விழாவில் ரஜினி பேசியதாவது:
அரசியலில் அலை முக்கியம். அதனால் தான், அலை உண்டாக வேண்டும்; இயக்கம் உருவாக வேண்டும் என்றேன்.
உடனே, ‘இவர் வர மாட்டாரா’ என, கேட்கின்றனர். எனவே ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன்.
சினிமாவில் இருந்து வந்த, எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவர், 25 ஆண்டுகள், தி.மு.க.,வில் இருந்தார்; ரொம்ப நல்லவர்; நிறைய உதவிகள் செய்துள்ளார். கருணாநிதி முதல்வராக, அவரும் மிகப்பெரிய காரணம் இருந்தார்.
திமுக.வில் பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கினார்கள்.
அவராக வெளியே சென்றிருந்தால் அது சரியாக இருந்திருக்காது. அவரை வெளியேற்றிய பின்னர் ‘என்ன தவறு செய்தேன்; கணக்கு கேட்டது தப்பா’ என, கேட்டார். அனுதாப அலை வீசியது. ...
