“இரவின் நிழல்” டீசர் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்!
1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார்.
இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது.
வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள்.
சிலர் பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள். பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ...









