ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: ஒமைக்ரான்

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி!

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி! தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 4,862 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து இன்று 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 80 மாணவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. எனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சுகாதார அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்ட...
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். வணக்கம் உங்கள் எல்லோருக்கும், என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2022-ம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா என்ற நோய் தொற்றின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலையில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான் உங்களுடைய முதல்- அமைச்சராக மட்டும் அல்ல. உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தான் என்னுடைய முதல் வேலையாக இர...
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி! உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால்...
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்! ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான முன் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி 3-...
ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்!

ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்! கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் முன்னதாகவே நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மிகப்பெரிய அளவில் தாக்கம் இல்லை. ஆனால், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைய ஆரம்பித்தது. இது உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதில் டெல்டா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் டெல்டா வைரசால் 2-வது அலை உருவாகி அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக தேவைப்பட்டது. இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி, சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் டெல்டா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட 2-வது அலையை இந்தியா கட்டுப்படுத்தியது. தற்போது இந்தியாவில் ...