கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - கோடங்கி விமர்சனம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரப்போகுதுன்னே தெரியாம திடீர்னு வந்த படம்... துல்கர் சல்மான் ஹீரோ... பட பேருக்கு ஏத்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரியாதான் இருக்கும்னு தியேட்டர்ல போய் உக்காந்தா படம் தொடங்கி பத்து பதினைஞ்சி நிமிஷம் வரைக்கும் என்னடா சொல்ல வர்றாங்க.. யார்றா இந்த டைரக்டருன்னு யோசிக்க வைக்கிறாங்க..
ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பு படத்துல தொடங்குனதும் மெல்ல ஸ்பீடு எடுக்குற் திரைக்கதை எங்கயும் நிக்காம ஓடிகிட்டே இருக்கு...
கவுதம் வாசுதேவ மேனன் ஒரு போலீஸ் அதிகாரியா உள்ள வந்ததும் திரைக்கதையோட ஸ்பீடு ஜெட் வேகம்தான்.
துல்கர் சல்மான் அவன் நண்பன் ரக்ஷன் அவங்க ஜோடிங்க ரிது வர்மா, நிரஞ்சனா... இந்த 4 பேரும் ஒரு கட்டத்துல ஒண்ணா கோவா போறாங்க...
கவுதம் வாசுதேவ மேனன் தலைமையில போலீஸ் கோவா வரைக்கும் வந்து துல்கர் சல்மான் ரூமுக்க...
