வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரப்போகுதுன்னே தெரியாம திடீர்னு வந்த படம்… துல்கர் சல்மான் ஹீரோ… பட பேருக்கு ஏத்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரியாதான் இருக்கும்னு தியேட்டர்ல போய் உக்காந்தா படம் தொடங்கி பத்து பதினைஞ்சி நிமிஷம் வரைக்கும் என்னடா சொல்ல வர்றாங்க.. யார்றா இந்த டைரக்டருன்னு யோசிக்க வைக்கிறாங்க..

ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பு படத்துல தொடங்குனதும் மெல்ல ஸ்பீடு எடுக்குற் திரைக்கதை எங்கயும் நிக்காம ஓடிகிட்டே இருக்கு…

கவுதம் வாசுதேவ மேனன் ஒரு போலீஸ் அதிகாரியா உள்ள வந்ததும் திரைக்கதையோட ஸ்பீடு ஜெட் வேகம்தான்.

துல்கர் சல்மான் அவன் நண்பன் ரக்‌ஷன் அவங்க ஜோடிங்க ரிது வர்மா, நிரஞ்சனா… இந்த 4 பேரும் ஒரு கட்டத்துல ஒண்ணா கோவா போறாங்க…

கவுதம் வாசுதேவ மேனன் தலைமையில போலீஸ் கோவா வரைக்கும் வந்து துல்கர் சல்மான் ரூமுக்கு வருது… சிக்கிட்டாண்டா சேகருன்னு ரசிகர்கள் யோசிக்கும்போது ஒரு டிவிஸ்ட் வைச்சி ஷாக் குடுக்குறார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

துறு துறு துல்கருக்கு ஏத்த கதை. தனக்கு குடுத்த கேர்க்டரை அவ்ளோ சிறப்பா செய்திருக்கார் துல்கர்.

ஹீரோ நண்பனா வரக்கூடிய ரக்‌ஷன் அட்டகாசம் போங்க… காமெடி சூப்பரா ஒர்க் அவுட் ஆகியிருக்கு.

ஸ்மார்ட்டான போலீஸ் அதிகாரியாக கவுதம் வாசுதேவ மேனன். ஒவ்வொரு பிரேமிலும் அத்தனை மிடுக்கு. பேசாம நடிகராவே இருந்துடுங்க கவுதம்.

ரிது, நிரஞ்சனா இரண்டு பேருமே செம கியூட்… நல்ல நடிப்பு. அழகு.

கதை என்னமோ தப்பான திருட்டு கதைதான்… ஆனா ரசிக்கிற மாதிரி ஸ்மார்ட்டா கொண்டுபோன இயக்குனர் தேசிங்கு சாமர்த்தியம் செம…

ஒரு வினைக்கு எதிர்வினை இருக்கும் அது மட்டும் படத்துல மிஸ் ஆகுது… என்னதான் ஸ்மார்ட் திருட்டு ஏமாத்து பேர்வழியா இருந்தாலும் எங்கயாவது ஒரு இடத்துல மாட்டிக்கனும் அல்லது தப்ப உணர்ந்துகிட்ட மாதிரியான காட்சியாவது இருந்திருக்கனும்.

ஜாலியான கலகலப்பான சினிமாவா இந்த குறையெல்லாம் தவிர்த்துட்டு பாத்தா ரசிக்கும் ரகம்.

என்ன ஒன்னு நல்லா ரசிகர்கள் தியேட்டர்ல கொண்டாட வேண்டிய படத்தை புரொமோஷன் எதுவுமே பன்னாம காலி பன்னிட்டதுதான் ஏன் புரியல.

மொத்தத்துல கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பார்க்கிற ரசிகர்களின் மனசை கொள்ளையடிக்கும்.

– கோடங்கி

1,530 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன