செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

சமூக வலைதளங்கங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு!

 

மிக முக்கியமான சமூக வலைதளங்கங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு!

பிரதமர் மோடியை சமூக வலைதளமான பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள்.

பெரும்பாலும் தனது கருத்தை இதுபோன்ற சமூக வலைதளங்கங்களில் மூலமாக மக்களுக்கு சொலவது பிரதமர் மோடியின் வழக்கம்.

இந்நிலையில் மிக ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் “நோசார்” (#NoSir) என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது #NoSir என்ற ஹேஸ்டேக் சமூகவலைதளங்களில் டிரண்டாகி வருகிறது.

பிரதமர் மோடி ஏன் இந்தமுடிவுக்கு வந்தார் என்பது பரம ரகசியமாக உள்ளது.

 

296 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன