வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: மோடி

இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்- பிரதமர் மோடி !

இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்- பிரதமர் மோடி !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பானிபட்டில் அமைக்கப்பட்டு உள்ள ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் ஆலையை பிரதமர் மோடி காணொலியில் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் தருவதாக அறிவிக்கலாம். இந்த மாதிரி இலவச திட்டங்களை அறிவிப்பதால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றி விடும். புதிய தொழில் நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தெளிவான நோக்கமும், உறுதிப்பாடும் தேவை. அரசியல் சுயநலத்துக்காக குறுக்கு வழிகளை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைதட்டல் மற்றும் அரசியல் ஆதாயங்களை பெறலாமே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு க...
இளையராஜாவின் கருத்திற்கு வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ்!

இளையராஜாவின் கருத்திற்கு வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள்
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்துதான் சர்ச்சையை பெரும் விவாதத்தைத் தூண்டியிரு...
கிராமி விருது வென்ற இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ்ஜிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கிராமி விருது வென்ற இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கேஜ்ஜிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமி விருதுகள் கருதப் படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. இதில் இந்திய இசைக்கலைஞர்  ரிக்கி கேஜ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா  ஆகியோர் கிராமி விருதுகளை வென்று உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 'டெவைன் டைட்ஸ்'க்காக ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து  இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார். சிறந்த குழந்தைகள் ஆல்பம் பிரிவில் கலர்புல் வேர்ல்ட் ஆல்பத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா கிராமி விருதை வென்றுள்ளார். இந்நிலையில் டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ்-க்கு பிரதமர்  மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரிக்கி கேஜ் வெளி...
நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு! கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  காணொலி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மோடி அரசு, பொருளாதாரத்தை மிக மோசமாக கையாளுகிறது. அதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் இருக்கிறது. பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில், இந்த சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய தார்மிக கடமை, காங்கிரசுக்கு இருக்கிறது. 70 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட சொத்துகள், மோடிஜியின் சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார்மயமாக்கத்துக்கு காங்கிரஸ் எதிரி அல்ல. ஆனால், காங்கிரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு ‘லாஜிக்’ இருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களை காங்கிரஸ் அரசு தனியார்மயம் ஆக்கியது ...
யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு!

யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு! வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே நேற்று முன்தினம் கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ள...
பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துக்கள் என அவர் பதிவு செய்துள்ளார்.  
நமது ஆராய்ச்சியில் 3 தடுப்பூசிகள் தயாராகிறது கொரானாவை வெல்வோம் – பிரதமர் மோடி

நமது ஆராய்ச்சியில் 3 தடுப்பூசிகள் தயாராகிறது கொரானாவை வெல்வோம் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:- * கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும் * நம் நாட்டிற்காக போராடி கொண்டிருக்கும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். * தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன. * இந்த தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் அனுமதி கொடுத்தவுடன் நாட்டில் மிகப்பெரிய அளவில் இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். *கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்...
576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை 1670 கோடிக்கு வாங்கியது ஏன்? ராகுல் கேள்வி

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை 1670 கோடிக்கு வாங்கியது ஏன்? ராகுல் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திவாலான அனில் அம்பானிக்கு ரபேல்  டெண்டர் கொடுத்தது ஏன்? ராகுல் கேள்வி   பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக 5 விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய அரசையும் சாடியுள்ளார். இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். 576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்? இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்திற்கு பதிலாக திவாலாகிப் போன அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்? இந...
கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் – ராகுல் குற்றச்சாட்டு

கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் – ராகுல் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் இல்லாததால் கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் - ராகுல் குற்றச்சாட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: நாட்டில் புதிதாகப் பல்வேறு பகுதிகளில் கொரானா பரவியுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டும் ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி இணைத்துள்ளார். பிரதமர் மோடி அமைதியாக உள்ளார் என்றும், கொரானாவை எதிர்த்துப் போராட மறுத்து அவர் சரணடைந்து விட்டார் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்....
புலம் பெயரும் தொழிலாளர்களிடம் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

புலம் பெயரும் தொழிலாளர்களிடம் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம்பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் போக்குவரத்து முடக்கத்தால் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கடந்த 1-ந் தேதி முதல் அவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். ஏராளமான தொழிலாளர்கள் நடை பயணமாகவும், சைக்கிள் மூலமும் ஊருக்கு செல்கின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது விபத்துக்களை சந்தித்து பலர் பலியாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய அரசு பல்வேறு உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர் வி‌ஷயத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ...