வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? நாளை முக்கிய முடிவு!

 

தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!?

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக நிலவி வந்தது.

இதை உறுதி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன். அதற்கான பணிகள் நடக்கிறது என்று சொல்லி ரசிகர்களை குஷிபடுத்தினார்.

ஏற்கனவே ரஜினி ரசிகர் மன்றம் இப்போது ரஜினி மக்கள் மன்றமாக பரபரப்பாக தமிழகம் முழுவதும் அடித்தள வேலை செய்து வந்தது.

இந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சி அறிவிப்பை உடனடியாக வெளியிட்டால்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக இருக்கும் என்பதால் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ரஜினி முடிவு செய்தார்.

வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு அன்று தனது கட்சியின் பெயரும் கொடியும் வெளியிட ரஜினி முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை, நடிகர் ரஜினிகாந்த் நாளை நேரில் சந்திக்கவுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

515 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன