Tag: Rajini makkal mandram
மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எப்போது சொன்னாரோ அப்போதிருந்தே ரஜினி என்ன பேசினாலும், செய்தாலும் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே அணி சேர்க்க ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சியாக அறிவிக்கவில்லை. அதே நேரம் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுதும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது....
தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? நாளை முக்கிய முடிவு!
தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!?
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக நிலவி வந்தது.
இதை உறுதி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன். அதற்கான பணிகள் நடக்கிறது என்று சொல்லி ரசிகர்களை குஷிபடுத்தினார்.
ஏற்கனவே ரஜினி ரசிகர் மன்றம் இப்போது ரஜினி மக்கள் மன்றமாக பரபரப்பாக தமிழகம் முழுவதும் அடித்தள வேலை செய்து வந்தது.
இந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சி அறிவிப்பை உடனடியாக வெளியிட்டால்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக இருக்கும் என்பதால் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ரஜினி முடிவு செய்தார்.
வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு அன்று தனது கட்சியின் பெயரும் கொடியும் வெளியிட ரஜினி முடிவு செய்து அதற்கான பணிகளில் ...


