புதன்கிழமை, மே 8
Shadow

மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

 

 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எப்போது சொன்னாரோ அப்போதிருந்தே ரஜினி என்ன பேசினாலும், செய்தாலும் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே அணி சேர்க்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சியாக அறிவிக்கவில்லை. அதே நேரம் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுதும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

387 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன