வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

காலேஜ் குமார் – விமர்சனம்

 

காலேஜ் குமார் திரைப்படம் 2017-ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற படம். இதே படம் அதே பேரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.

இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு,, ராகுல்விஜய், மதுபாலா நடித்திருக்கும் இந்த படத்தை எல். பத்மநபா தயாரித்திருக்கிறார். ஃகுதுப் இக்ரிபா இசையமைத்துள்ளார்.

கதைப்படி பிரபு மதுபாலா மகன் ராகுல். கல்லூரியில் படிப்பு சரியாக வராததால் முதல் மார்க் வாங்கும் மாணவர் பெயரில் அப்பா அம்மாவை ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த தில்லுமுள்ளு தெரிந்து போகிறது.

அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒருவரை ஒருவர் சவால் விட்டுக்கொள்கிறார்கள்.

என்ன சவால் அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் காலேஜ் குமார் கதை.

பிரபு வழக்கம் போல கேரக்டருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். அவருக்கு ஜோடியான மதுபாலாவுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.

புதுமுகம் ராகுல் சில நேரம் மட்டும் கவர்கிறார். கதாநாயகி பிரியாவுக்கும் பெருசா ஸ்கோப் இல்லை. மனோபாலா, சாம்ஸ் என காமெடி நட்சத்திர பட்டாளம் இருந்தும் சுவாரஸ்யம் குறைவு.

பலகீனமான திரைக்கதையால் லாஜிக் சுத்தமாக இல்லாத மேக்கிங்கால் காலேஜ் குமார் பாஸ் ஆவது சிரமம்!

555 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன