வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

 

 

மலையாள சேச்சியாக மாறிய கீர்த்தி சுரேஷ் புதுகெட்டப்!

மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. இப்படத்தில் மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரனவ்லால் உள்ளிட பலர் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் வரும் மார்ச் 26 -ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் கலைப்புலி தாணு வெளியிடவுள்ளார். தமிழில் ஆர்.பி.பாலா வசனத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திர புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சேச்சியாக மாறி படு வித்யாசமான கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் இருக்கும் படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வீரரான குஞ்சாலி மரைக்கார் என்பவரை பற்றிய சரித்திர படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

839 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன