வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் ச...
“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்!

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார். தான் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும...
ஜெய்பீமை போல் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

ஜெய்பீமை போல் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழில் இயக்குனர் செல்வராகன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமசுடன் இணைந்து 'வாசி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு ஜி.ராகவ் இயக்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'வாசி' திரைப்படத்தை கீர்த்தி சுரேசின் அக்கா தன்னுடைய ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் போலவுள்ளது என ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்....
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ...
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

HOME SLIDER, NEWS, நடிகைகள்
  நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும். கொரோனா தொற்றிலிர...
குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குவியும் பட வாய்ப்பு... சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும்...
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை! ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்!

‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘அண்ணாத்த’-யை தொடர்ந்து ‘சாணிக்காயிதம்’ படத்திலும் கீர்த்தி சுரேஷுக்கு அந்த மாதிரி வேடம் தானாம்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இதுவரை பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தொடர்ச்சியாக தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்துள்ள அவர், அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார். இதில் இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்திலும், நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் 4 நிமிடம் சென்டிமெண்ட் காட்சி ஒன்று இருப்பதாகவும், அந்தக் காட்சியில் நடிகை கீர்த்தி ச...
இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்! கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான படம் ‘மிமி’. இது கடந்த 2011-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். லக்‌ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. கீர்த்தி சனோன் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இந்நிலையில், மிமி படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து...
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்?

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்? கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே குட்லக் சகி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப...