சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாள் நிகழ்விற்கு போன அஜீத்!

 

தமிழில் அறிமுகமாகி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவின் புகழ் உச்சியில் இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது திடீரென மரணம் அடைந்தார்.

இவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மும்பை வீட்டில் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் போனிகபூர் குடும்பத்தாருடன் நடிகர் அஜித்தும் கலந்துக் கொண்டார்.

போனிகபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் இப்போது அஜீத் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை படத்திலும் அஜீத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

781 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன