வட்டிகட்டாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்டவர் கொலை… குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை!
வட்டி கட்டாத பெண்ணை பாலியல் கொடுமை செய்ததை தட்டிக் கேட்டவரை கொன்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை!
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர் குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்தது. பல குடும்பங்கள் இந்த கந்துவட்டி கும்பலின் கொடூரத்தால் சீரழிக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு கடன் பெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைத் தல சிவா என்ற சிவக்குமார் தலைமையிலான கந்துவட்டி கும்பல் கடத்திச் சென்றது. அதன் பின்னர் பணத்தைக் கட்டமுடியாத கையறு நிலையில் கண்கலங்கி நின்ற அந்தப் பெண்ணை அப்படியே இழுத்துக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறது.
அதன்பின் தனது பைனான்ஸ் கம்பெனியில் வ...
