திங்கட்கிழமை, மே 13
Shadow

வட்டிகட்டாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்டவர் கொலை… குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை!

 

வட்டி கட்டாத பெண்ணை பாலியல் கொடுமை செய்ததை தட்டிக் கேட்டவரை கொன்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு 34 ஆண்டுகள் சிறை!

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர் குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்தது. பல குடும்பங்கள் இந்த கந்துவட்டி கும்பலின் கொடூரத்தால் சீரழிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு கடன் பெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைத் தல சிவா என்ற சிவக்குமார் தலைமையிலான கந்துவட்டி கும்பல் கடத்திச் சென்றது. அதன் பின்னர் பணத்தைக் கட்டமுடியாத கையறு நிலையில் கண்கலங்கி நின்ற அந்தப் பெண்ணை அப்படியே இழுத்துக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறது.
அதன்பின் தனது பைனான்ஸ் கம்பெனியில் வட்டி வசூலிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த ஒருவரைக் கட்டாய பாலியல் வல்லுறவில் ஈடுபடச் செய்து தலசிவா ரசித்து இருக்கிறான். தொடர்ந்து அந்த அலங்கோலங்களை வீடியோவில் பதிவு செய்து, அதனை ஒரு இணையதளத்திற்கு விலைபேசி விற்றிருக்கின்றனர்

இணையதளத்திலும், செல்போன்களிலும் இந்த காட்சி பரவியதை அறிந்து அந்த குடும்பத்தினர் இந்த கொடூரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

ஆனாலும் கந்துவட்டி கும்பலின் செல்வாக்கின் காரணமாக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வத்னர்.
இதையடுத்து கந்துவட்டி கும்பலின் பாலியல் வக்கிரத்திற்கு ஆளான குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியை நாடி முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியின் சிபிஎம் கிளைச்செயலாளரான வேலுச்சாமி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு உரிய நீதி வேண்டியும், அந்த கும்பலைக் கைது செய்து சட்டப்படி தண்டிக்கவும் காவல்நிலையத்திற்குச் சென்று வழக்கு பதிவு செய்யுமாறு பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இதனால் பெரும் ஆத்திரமடைந்த அந்த கந்துவட்டி கும்பல் வேலுச்சாமிக்குத் தொடர் மிரட்டல் விடுத்து. அதோடு நிற்காமல் வெலுச்சாமியின் வீட்டிற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டல் தொடர்பாகவும் வேலுச்சாமி மீண்டும் காவல்நிலையம் சென்று புகார் அளித்தார்.

புகார் அளித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில் வழிமறித்த தலசிவா தலைமையிலான கந்துவட்டி கும்பல் வேலுச்சாமியைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குகள் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலியல் வல்லுறவு மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்ட வழக்கில் இன்று பள்ளிப்பாளையம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்த தீர்ப்பில் தலசிவா உள்ளிட்ட கும்பல் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. குற்றத்திற்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடத்தல், பாலியல் வல்லுறவு, இணைய தளத்தில் பாலியல் வீடியோவை பதிவேற்றிய குற்றத்திற்காக தனித்தனியா 3 பத்தாண்டுகள் மற்றும் 3 ஆண்டு மற்றும் ஒரு ஆண்டு சிறை என்ற வகையில் மொத்தம் 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.
அதன்படி இன்னும் பத்தாண்டுகள் குற்றவாளிகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்குக் குற்றவாளிகள் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

186 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன