சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

நாடு முழுதும் இடைத்தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!

 

நாடு முழுதும் இடைத்தேர்தல்கள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக இன்று நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சரியான நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வைரஸ் பரவல் காரணமாக குறித்த நேரத்தில் இடைத்தேர்தல் நடத்துவது சிரமம் என்ற கருத்து வெளியானது. அதோடு, அடுத்த ஆண்டு மே மாதத்துடன் தமிழக அரசின் பதவி காலம் முடிவடைவதால் பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

359 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன