கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!
கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அதிரடி
சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட்.
இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவி...
