Friday, April 3
Shadow

Tag: கலைப்புலி எஸ்.தாணு

ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..! தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் பரபரப்பான படம் அசுரன். அசுரன்' படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமையை அடுத்து சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அதனை அடுத்து திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. எனவே நீண்ட விடுமுறை இடைவெளி கொண்ட ஒரு பக்கா நாளில் ரிலீஸ் தேதியை தனுஷ் படம் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.   தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வரும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள். தற்போது இப்படத்தை தனுஷ் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் தனது அடுத்தப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்