Saturday, July 4
Shadow

ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

159 Views

 

 

ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் பரபரப்பான படம் அசுரன்.

அசுரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமையை அடுத்து சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அதனை அடுத்து திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. எனவே நீண்ட விடுமுறை இடைவெளி கொண்ட ஒரு பக்கா நாளில் ரிலீஸ் தேதியை தனுஷ் படம் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

 

தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வரும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.  ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *