வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதியை அறிவித்த சமந்தா படக்குழு !

ரிலீஸ் தேதியை அறிவித்த சமந்தா படக்குழு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெ...
திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் ஒரு வீடியோ பதிவு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து...
‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு! நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாக...
ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இயக்குனராக அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ஹிப்ஹாப் ஆதி இயக்கியுள்ள புதிய படம் ‘சிவக்குமாரின் சபதம்’. இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளதோடு இசையமைத்தும் உள்ளார். இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார். அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சிவக்குமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்பட...
ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..! தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் பரபரப்பான படம் அசுரன். அசுரன்' படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமையை அடுத்து சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அதனை அடுத்து திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. எனவே நீண்ட விடுமுறை இடைவெளி கொண்ட ஒரு பக்கா நாளில் ரிலீஸ் தேதியை தனுஷ் படம் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.   தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வரும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள...