புதன்கிழமை, ஆகஸ்ட் 26
Shadow

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் ஒரு வீடியோ பதிவு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

363 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன