வியாழக்கிழமை, அக்டோபர் 29
Shadow

முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமானு கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள விக்ரம் திரைப்படம், 10 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் விக்ரம் திரைப்படத்தை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்துள்ளார். விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நிகழ்ந்தது.

மனமும் நெகிழ்ந்தது என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன