வியாழக்கிழமை, ஜூன் 1
Shadow

Tag: CM MK Stalin

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுப்படவுள்ளார். மேலும், 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்....
”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்....
இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு வாழ்த்துமடல் மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.. கவிஞரும் தன் பங்களிப்பாக...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், தமிழக அரசியல்
தமிழ்நாடு அரசு இரண்டாண்டு கால "தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம், திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும். இதை தொடங்...
சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள், தமிழக அரசியல், விளையாட்டு செய்திகள்
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 2019-2021 ஆண்டுகளில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். விழாவில் 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:- தமிழகத்தில் விளையாட்டு துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. சிலம்பம், கபடி போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த நிலையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி, சென்னையில் இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. பிப்ரவரி மாதம் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நட...
பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை, மு.க.ஸ்டாலின் வாழ்க – இளையராஜா!

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை, மு.க.ஸ்டாலின் வாழ்க – இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து பாரதியாரின் நினைவு நாளையொட்டி, இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, 'நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? 'நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' தன்னை நல்லதோரு வீணையாகவும் அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்லும்...
தமிழகத்தில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்: தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தமிழகத்தில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்: தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்: 1. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி) 2. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு) 3. கோத்தாரி - SEMS குழுமம் (தோல் அல்லாத காலணி உற்பத்தி) 4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி) 5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி) இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ...
முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 3ம் தேதி கேரளா பயணம்!

முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 3ம் தேதி கேரளா பயணம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் ஆகியவை கொண்டது தென் மண்டல கவுன்சில். இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் அடுத்த மாதம் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் 3-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்....
மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ண கொடியையையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தை மலிவுபடுத்தி இருக்கின்றனர். அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், தேசிய கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இது தமிழ்நாடு இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். தாங்கள்தான் தேசப்பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் என நினைத்து ...
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு !

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகிறது. போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த 5-ந்தேதி எழுதிய கடிதத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க உறுதி ஏற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தி போத...