வியாழக்கிழமை, ஜூன் 1
Shadow

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுப்படவுள்ளார்.

மேலும், 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

84 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன