வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுப்படவுள்ளார். மேலும், 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்....
தமிழகத்தில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்: தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தமிழகத்தில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்: தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்: 1. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி) 2. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு) 3. கோத்தாரி - SEMS குழுமம் (தோல் அல்லாத காலணி உற்பத்தி) 4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி) 5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி) இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ...
மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ண கொடியையையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தை மலிவுபடுத்தி இருக்கின்றனர். அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், தேசிய கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இது தமிழ்நாடு இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். தாங்கள்தான் தேசப்பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் என நினைத்து ...
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்!

HOME SLIDER, NEWS, politics, sports, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையை அடுத்த மாமல்லாபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜுலை 28-ந் தேதி மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறும் வகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வந்தது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர். 12 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை நேரு உ...
நெஞ்சுக்கு நீதி  படத்தை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெஞ்சுக்கு நீதி படத்தை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நெஞ்சுக்கு நீதி  படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  ‘நெஞ்சுக்கு நீதி’  திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மே மாதம் 20-ந்தேதி அன்று வெளியாக உள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் – வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் – வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் - வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் காரில் பயணம் செய்தார்....
முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்!

முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்த சிறப்பு மலரையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்....
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள், தமிழக அரசியல், விளையாட்டு செய்திகள்
மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18) உயிரிழந்தார். 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தீனதயாளனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு 5 ல...
முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு மேல் பலம் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி தி.மு.க.வுக்கு டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பா.ஜனதா அலுவலகம் அருகே 2013-ம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் தி.மு.க. அலுவலகமான ‘அண்ணா கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதன்படி டெல்லி அறிவாலய கட்டுமான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அறிவாலயத்தை திறக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வந்ததால் திறப்பு விழா தேதி உடனே முடிவ...
பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இன்று பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...