சனிக்கிழமை, நவம்பர் 1
Shadow

மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ண கொடியையையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம்.

தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தை மலிவுபடுத்தி இருக்கின்றனர்.

அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், தேசிய கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இது தமிழ்நாடு இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது.

இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். தாங்கள்தான் தேசப்பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் என நினைத்து வரம்பு மீறுவது வாடிக்கையாகி வருகிறது.

தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தை சட்டப்படி அடக்குவோம்.

தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

405 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன